#இயற்கை_365 #104
#இயற்கை_365 #104
பாயாசத்தில் மிதக்கும், சின்னஞ்சிறு வெண்ணிற முத்துக்களான ஜவ்வரிசி என்ற Sagoவைத் தரும் Sago palmன் தாவரப் பெயர் Metroxylon sagu.
தோன்றிய இடம்: இந்தோனீசியா..
"இந்த ஒயிட் சீட்ஸ் எந்த செடியிலிருந்து நமக்கு கிடைக்குதும்மா..?" என்ற டுட்டூவின் கேள்விக்கான தேடல் தந்த பதிவு
#ஜவ்வரிசி..
Sago, Sabudunia, Saboodana, Sagu pearls என அழைக்கப்படும் ஜவ்வரிசி, ஒரு பதப்படுத்தப்பட்ட சைவ உணவாகும்..
Metroxylon Sago என்ற தாவரப் பெயரில் Xylon என்பது மரம் என்றும், Metro என்பது மரத்தின் நடுப்பகுதி என்றும் கிரேக்க மொழியில் பொருள்படும்..
Sagu என்பது மலாய் மொழியிலிருந்து வந்த பெயராகும்..
Sago palm என்ற பனை மரத்தின் நடுத்தண்டிலிருந்து ஜவ்வரிசி பெறப்படுகிறது..
நமது ஊரில், மரவள்ளிக்கிழங்கின் மாவிலிருந்தும், ஜப்பானில் Cycas என்ற பனையிலிருந்தும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது..
அதிக கலோரிகள் (351/100g), அதிக கார்ப்போஹைட்ரேட்கள் நிறைந்த ஜவ்வரிசியில், கால்சியம், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, மற்றும் B வைட்டமின்களும் உள்ளன..
உடல் எடை கூடுவதற்கு பெரிதும் உதவும் ஜவ்வரிசி, இரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி, எலும்புப்புரை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிலும் பயனளிக்கும்..
ஜவ்வரிசி செல்களைப் புதுப்பித்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது..
இரத்த சோகையைப் போக்குகிறது..
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பதட்ட நிலையைக் குறைக்கிறது.. எலும்புகளுக்கு வலிமை சேர்க்கிறது.. மூட்டுவலிக்கு நிவாரணியாகவும் விளங்குகிறது..
இதன் அதிக கலோரிகள் தசைகளுக்கு வலுவூட்டச் செய்வதால்
உடற்பயிற்சிக்கு முன்னும், பின்பும் உட்கொள்ளப்படுகிறது..
குழந்தைகளுக்கான முதல் திடஉணவு, கர்ப்பகால வாந்திக்கான உணவு, விளையாட்டு வீரர்களுக்கு உடனடி ஆற்றலை தரும் உணவு, விரதத்தின்போது பெரிதும் உட்கொள்ளப்படும் உணவு, நோயினால் ஏற்படும் அசதியைப் போக்கும் உணவு என ஜவ்வரிசி தரும் பலன்கள் ஏராளம்..
நம்மிடையே கஞ்சி, பாயாசம், வடகம், உப்புமா ஆகியவற்றைத் தயாரிக்க பயன்படும் ஜவ்வரிசி கொண்டு மலேசியா மற்றும் தாய்லாந்தில் Keropok Lekor, Pempek, Ambuyat ஆகிய உணவு வகைகளை தயாரிக்கின்றனர்..
Bubble Tea எனப்படும் ஜவ்வரிசி கலந்த தேநீர், பிரபலமான பானமாகும்..
Pudding, Cake, Soup, Stew ஆகியவற்றின் திடப்பொருளாகப் பயன்படும் ஜவ்வரிசி, மதுபானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது..
5000 ஆண்டுகளாக சீனர்களின் முக்கிய உணவாக பயன்பாட்டில் உள்ள ஜவ்வரிசி,
அரிசியைக் காட்டிலும் முக்கிய உணவாக விளங்குகிறது..
Sago பனைமரங்கள் இந்தோனீசியா, மலேசியா, ஜாவா, சுமத்ரா, தாய்லாந்து ஆகிய வெப்பநிலை பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன..
பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு, இந்த பனை மரங்களிலிருந்து, Sago கிடைக்கப்பெறுகிறது..
செபிக் பழங்குடியினர்
புதிதாக பிடித்த மீனை, Sago பனைமரத்தின் மாவுடன் சேர்த்து சமைத்து விருந்து படைக்கின்றனர்..
Sagu வளரும் இடத்திற்கு வந்த யாரும், பசியுடன் திரும்பச் செல்லுவதில்லை என்பது இவர்களது விருந்தோம்பல் மொழியாகும்..
மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து ஜவ்வரிசியை முதன்முதலில் தயாரித்தவர், சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் அவர்கள்..
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையைப் போக்க, சீமை பனைமர ஜவ்வரிசிக்கு பதிலாக, மரவள்ளியை பயன்படுத்தினார் மாணிக்கம்..
பிறகு இது, இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது சேலத்தில் 600 க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்குகின்றன..
Sago பனைமர ஜவ்வரிசி, இந்தோனீசியா, மலேசியா, ஜாவா ஆகிய நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது..
மிக எளிதாக ஜீரணமாக்கூடிய,
அதிக ஆற்றலையும் தரக்கூடிய Energy Boosters தான் இந்த சின்னஞ்சிறு ஜவ்வரிசி முத்துகள்..
#இயற்கை_365