#இயற்கை_365 #105
#இயற்கை_365 #105
முன்னே கசந்து, பின்னே இனிக்கும் முதுநெல்லிக்காயின் தாவரப் பெயர் Phyllanthus embilica.
தோன்றிய இடம்: இந்தியா..
மலை நெல்லிக்காயை உண்டபிறகு, தண்ணீரைக் குடித்தால் நாவினிக்கும் என்பதற்காகவே பாக்கெட்களில் நெல்லியை சேமித்து வைத்த, சுவை மிகுந்த பால்ய கால நினைவுகளுடன், இன்றைய இயற்கை பதிவு..
#நெல்லிக்காய்..
Indian Gooseberry, ஆம்லா, அமலாகி என அழைக்கப்படும்
நெல்லிக்காய், அரி நெல்லி, மலை நெல்லி என இருவகைப் படும்..
ராஜ கனி, காயகல்பம் என போற்றப்படும் நெல்லி, துவர்ப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட கனியாகும்..
"A Gooseberry A Day, keeps the diseases away.." என்ற பெருமை மிக்க இந்த ஏழைகளின் ஆப்பிளில்
அடங்கியுள்ளது அனைத்து மருத்துவ குணங்களும்..
குறைந்த கலோரிகள் (48/100g), அதிக நீர்த்தன்மை, (82%) அதிக நார்ச்சத்து, அதிகளவு வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை நெல்லி..
One Man Army என அழைக்கப்படும் நெல்லிக்காயில் அதிகளவு (450- 600mg/100g) வைட்டமின் C மற்றும் E உள்ளது..
Glutamate, Aspartate, Cystine, Lysine, Arginine ஆகிய அமினோ அமிலங்களும், பொட்டாசியம், கால்சியம், குரோமியம், செலினியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் ஆகியனவும் நிறைந்தவை இவை..
Pectin, Phyllembein, Geranin, Tannin,
Kaemferol, Quercetin, Gallic acid ஆகிய தாவரச்சத்துகள், நெல்லிக்காயின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக விளங்குகிறது..
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சித்தர்களும், முனிவர்களும் காயசித்தி பெற்ற நெல்லிக்காய், வயோதிகத்தை தடுக்கவல்லது என்கிறது தற்போதைய ஆய்வுகள்..
நீரிழிவு நோய், இருதய நோய், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆற்றல் கொண்டவை நெல்லிக்காய்..
மஞ்சள் காமாலை, வயிற்று அழற்சி, வாய்ப்புண், குடல் நோய்கள், மலச்சிக்கல் ஆகியவற்றிலும் நெல்லி பயனளிக்கிறது..
ஒற்றைத் தலைவலி, ஞாபக மறதி, மன அழுத்தம், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் பயனளிக்கும்..
கண் நோய்களிலிருந்து பாதுகாப்பு தருவதுடன்,
சரும பாதுகாப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன நெல்லி..
கல்லீரல், பெருங்குடல், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு நெல்லிக்காய்..
மேலும் மதுவினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளையும், கதிரியக்கத்தால் தோன்றும் பக்கவிளைவுகளையும் பெருமளவு குறைக்கிறது நெல்லி..
பிரயாணத்தின் போது ஏற்படும் வாந்தி, மயக்கத்திற்கு உற்ற மருந்தாக திகழ்கிறது நெல்லி..
மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
Disclaimer: அதிகளவில் நெல்லியை உட்கொள்ளும் போது, ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் எடை குறைவு ஆகியன ஏற்படக்கூடும்..
பெரிய மரத்தில் சிறிய இலைகளுக்கு நடுவே கொத்து கொத்தாக காய்க்கும் நெல்லிக்காய்கள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன..
அப்படியே சாப்பிடலாம்..
அல்லது ஜூஸ், சட்னி, ஊறுகாயாக உட்கொள்ளலாம்..
உலர்ந்த பதனிடப்பட்ட நெல்லி, நெல்லிக்காய் பொடி, chyawanprash ஆகியன வியாபார மயமாக்கப்பட்ட நெல்லியின் வடிவங்கள்..
நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனிக்கு நீண்ட வரலாறும் உள்ளது..
அற்புத நெல்லிக்கனி, அரசன் அதியமானுக்கு கிடைத்தபோது அதனை, தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட ஔவையாருக்கு ஈந்த வரலாறு செறிந்தது தமிழகம்..
சாத்வீக குணங்களைக் கொண்ட நெல்லிக்காய் விஷ்ணுவின் ரூபமாகவும், மகாலட்சுமியின் உறைவிடமாகவும் கருதப்படுகிறது..
சிவபெருமானின் கண்களில் வழிந்த நீர் உருத்திராட்சமாகவும், திருமாலின் கண்களில் வழிந்த நீர் நெல்லியாகவும் தோற்றம் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன..
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தில்
சிந்திய அமிர்தம் நெல்லியாக உருவானது என்றும் கூறப்படுகிறது..
Amalakki என்றால் செல்வத்தின் கடவுள் உறையும் இடம் என்ற பொருளாம்..
மகாலட்சுமியின் வடிவமான நெல்லிக்கனியை பெற்ற பிறகு, ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை அருளினார் என்றும் கூறப்படுகிறது..
"நெல்லியால் நெடும்பகை போகும்.." என்ற பழமொழிக்கேற்ப, உடலில் பல்வேறு நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது நெல்லிக்காய்..
#இயற்கை_365