#இயற்கை_365 #108
#இயற்கை_365 #108
மூலிகைச் செடி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருகின்ற கீழாநெல்லியின் தாவரப் பெயர் Phyllanthus niruri.
தோன்றிய இடம்: இந்தியா..
கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்..
ஆனால், அதையும் தாண்டி பல்வேறு பலன்களை அள்ளி வழங்கும் கீழாநெல்லியைப் பற்றிய சிறிய பதிவு..
#இன்று..
கோடைக்காலம் வந்தாலே, உடன் வலம்வரும் சிறுநீரக கற்களுக்கும் அருமருந்தாகும் கீழாநெல்லிக்கீரை, Stone Breaker என்றே ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது..
Gale of wind, Shatter Stone, Hurricane weed, Seed under leaf என்ற பெயர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்றும் நம்மிடையே வழங்கப்படுகிறது..
கீழாநெல்லி இலையின் நடு நரம்பின் கீழாக, அழகிய பூக்களும், பசுமையான சிறு காய்களும் தொங்குவதால், இதற்கு கீழாநெல்லி என்ற பெயர் வந்தது..
கீழாநெல்லி, சதுப்பு நிலங்களிலும், வயல் பரப்புகளிலும், நீர் நிறைந்த இடங்களிலும் தன்னிச்சையாக வளரகூடிய தாவரமாகும்..
சின்னஞ்சிறுப் பூக்களையும், காய்களையும் கொண்ட கீழாநெல்லிக் கீரையில், புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு என அனைத்துச் சுவைகளும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன..
Lycopene, Amarin, Geranin, Niranthin, Flavanoids, Saponins, Lignans, Rutin, Terpenoids, Limonene, Coumarins என அனைத்து தாவரச்சத்துகளையும் உள்ளடக்கியது இந்த சிறிய செடி..
மழைக் காலங்களில் செழித்து வளரும் கீழாநெல்லியின் சிறு இலைகளும், காய்களும், வேர்களும், கோடைக்கால நோய்களான காமாலை, சிறுநீர்த் தொற்று, சிறுநீரக கற்கள், அம்மை நோய் ஆகியவற்றிற்கு பெரிதும் பயனளிகின்றன..
ஹெபடைடிஸ் ஏ, பி, சி ஆகியவற்றின் நோய்த் தாக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட கீழாநெல்லி, கல்லீரல் வீக்கம், மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சிக்கும், மண்ணீரல் வீக்கத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறது..
செரிமானமின்மை, வாந்தி, மயக்கம், வயிற்று அழற்சி, பெருங்குடல் அழற்சி ஆகியவற்றிற்கு கீழாநெல்லி இலைகள் பெரிதும் பயனளிக்கும்..
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய், மன அழுத்தம், ஆஸ்துமா, கண் மற்றும் சரும நோய்கள், குறிப்பாக சொரியாசிஸ் ஆகியவற்றிற்கு கீழாநெல்லி பெரிதும் உதவுகிறது..
நோயெதிர்ப்பு சக்தி மிக்க கீழாநெல்லி வேர்கள், சிறுநீர் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும், வலி நிவாரணியாகவும் பயனளிக்கின்றன..
Disclaimer: இதிலுள்ள Coumarin, இரத்தம் உறைதல் தன்மையை மாற்றக் கூடும் என்பதால், Anticoagulants மருந்துகளை உட்கொள்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது..
பல நூற்றாண்டுகளாக நமது மருத்துவ முறைகளில் கீழா நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகின்றது..
"கீழா நெல்லிக் குணந்தான் கேளாய்.. மது மேகந்
தாழாக்கா.." என்ற தேரையர் குணப்பாடம்,
கண் நோய்கள், சர்க்கரை வியாதி, நாள்பட்ட மேகப்புண் ஆகியவற்றை கீழாநெல்லி போக்கும் என்கிறது..
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது கீழாநெல்லி..
கீழாநெல்லி இலைகள் மற்றும் வேர்களை அரைத்து நீரில் அல்லது மோருடன் கலந்து பருகலாம்..
கீழாநெல்லி இலைகளின் தேநீர் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் பருகப்படுகிறது..
உலர்த்தி பொடி செய்யப்பட்ட இலைகள் மற்றும் வேர்கள் விற்பனைக்கு உள்ளன..
கீழாநெல்லயின் இலைகள் கொண்டு, பதிவுரிமை செய்யப்பட்ட பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன..
சாதாரண களைச்செடியாக குப்பையில் வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக் கொண்டாடுகிறது உலகம்..
மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நமது காலடியில் கிடக்கும் கீழாநெல்லி, உண்மையில் நோய்களுக்கெல்லாம் கில்லி தான்..
#இயற்கை_365