#இயற்கை_365 #110
#இயற்கை_365 #110
புதிய தொடக்கம்..
புதுவரவு..
புன்னகை..
ஆகியவற்றைக் குறிக்கும் மணமிக்க Plumeria என்ற பெருங்கள்ளியின் தாவரப் பெயர் Plumeria rubra.
தோன்றிய இடம்: மெக்சிக்கோ..
வெள்ளை நிறப் பூக்களின் இதழ்களில் சிறிய துளைகள் செய்து, அவற்றை பின்பக்கமாக பூத்தண்டில் சொருகி, பூச்செண்டு ஒன்றை தோழிக்கு பிறந்தநாள் பரிசளித்த பள்ளி நினைவுகளுடன்..
#Plumeria_என்ற_பெருங்கள்ளி..
#இன்று..
Charles Plumer என்ற ஃப்ரெஞ்சு தாவரவியலாளரைச் சிறப்பிக்கும் வகையில் Plumeria என்ற பெயர் கொண்ட பெருங்கள்ளி, Frangipani, Temple Tree, Pagoda Tree, Egg Yolk flower என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது..
அரளியைப் போலவே தோற்றமளிக்கும் பெருங்கள்ளி, கப்பல் அரளி, மலை அரளி, கள்ளிமந்தாரை, ஈழத்து அரளி, நிலசம்பங்கி, சமேலி, சம்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது..
சிறிய மரவகையைச் சார்ந்த இந்த பெருங்கள்ளியை, மெக்சிக்கோவிலிருந்து, Frangipani என்ற இத்தாலியர் அதன் நறுமணத்திற்காக இத்தாலிக்கு கொண்டு சேர்க்க, பிறகு உலகெங்கும் மணம் வீசத் தொடங்கியது Frangipani என்ற ப்ளூமேரியா..
வெள்ளை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் ப்ளூமேரியா காணப்படுகிறது..
ப்ளூமேரியா மலர்கள், அழகுக்காகவும், நறுமணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பூத்தண்டு, பால், இலைகள், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை..
Alkalonic acids, Nerolidol, Geraniol, Beta Sitosterol, Triterpenes, Glycosides, Lupeol, Benzyl Benzoate ஆகிய தாவரப் பொருட்கள் நிறைந்தவை ப்ளூமேரியா பூக்கள்..
ப்ளூமேரியா பூக்களிலிருந்து Plumeria/Frangipani எண்ணெய் பெறப்படுகிறது..
Frangipani எண்ணெய்
நுண்ணுயிர் எதிர்ப்பியாகத் திகழ்கிறது..
மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது..
அரோமா தெரபி, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களில் பெரிதும் சேர்க்கப்படுகிறது..
ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்ட நிலை, படபடப்பு மற்றும் இடுப்பு வலி, தோல் வறட்சி ஆகியவற்றில் உதவும் இதன் எண்ணெய்
பாலுணர்வைத் தூண்டவும் செய்கிறது..
ப்ளூமேரியாவின் வேர்ப்பட்டை தேமல், சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு அருமருந்தாகும்..
ப்ளூமேரியா இலைகள் வயிற்றுப்போக்கு, தொண்டை அழற்சி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்துகின்றன..
ப்ளூமேரியாவின் இலை மற்றும் தண்டிலிருந்து வெளிவரும் பால் போன்ற திரவம், ஈறுகளின் வீக்கம், மூட்டு வலி, பக்கவாதம், தோல் நோய்கள், மரு ஆகியவற்றில் மேல்பூச்சாக பயன்படுகிறது..
வேர்ப்பட்டை தேமல், சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு அருமருந்தாகிறது..
Disclaimer: Cyanogenic compounds என்ற நச்சுப்பொருள் உள்ளதால் இதனை உட்கொள்ள, தடை விதித்துள்ளது USDA..
வாசனைக்காகவும், அழகுக்காகவும் வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படும் ப்ளூமேரியா, இரண்டாயிரம் ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதாக மாயன் மற்றும் அஸ்டெக் நாகரிகங்கள் உணர்த்துகின்றன..
"ஈழத்தலரிப் பாவேறு புரைப்புண் தொடையின் வாழைப் புற்றும்போக்கும் மால்.." என்கிறது அகத்தியர் குணப்பாடம்..
கடவுளை உருவாக்கும் ஆற்றல் கொண்ட மலர்கள் என ப்ளூமேரியாவை மெக்சிக்கோவினர் கொண்டாடுகின்றனர்..
பெண்மையைக் குறிக்கவும், காதல் கடவுளான வீனஸைக் குறிக்கவும் ப்ளூமேரியா உபயோகப்படுத்தப்படுகிறது.
அன்பு, அர்ப்பணிப்பு, புனிதம், பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் வெண்ணிற மற்றும் மஞ்சள் நிற பெருங்கள்ளி மலர்களை, கோவில்களில் அர்ச்சனைக்கும்,
திருமண வைபவங்களிலும் பயன்படுத்துகின்றனர்..
புத்தருக்கு சாற்றப்படும் மலர்களில் பெருங்கள்ளி முக்கியமான ஒன்றாகும்..
அமைதியை, அழகை, நளினத்தைக் குறிக்கும் நறுமணமிக்க ப்ளுமேரியா, காதலை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது..
இளைய ராணிக்குப் பிறந்த அழகிய இரட்டைக் குழந்தைகளை, மூத்த தாரம் கொன்று குடிசை ஒன்றில் புதைக்க, அங்கு தோன்றியவை தான் சம்பா மற்றும் சமேலி பூக்கள்..
மீண்டும் தாய் தந்தையுடன் ப்ளூமேரியா என்ற சம்பா_சமேலி பூக்களாக ஒன்று சேர்ந்து, இறவா நிலையுடன் நாடெங்கும், உலகெங்கும் மணம் வீசுகின்றன என்கிறது ஒரு கிராமியக் கதை..
பௌத்த மதத்தினரும், இஸ்லாமியரும் ப்ளூமேரியா மலர்களை, சமாதிகளில் வைக்கும் காரணமும், மீண்டும் இறந்தவர் உயிர்தெழ இவை உதவும் என்ற நம்பிக்கையால் தானாம்..
நிஹராகுவா மற்றும் லாவோஸ் நாட்டின் தேசிய மலர் ப்ளூமேரியா..
ப்ளூமேரியாவின் தண்டை வெட்டி வைத்தாலே, அது வேர்விட்டு வளர்ந்து அடர்த்தியான மரமாகிவிடும்..
ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பூக்கும் இவை, மரங்களில் இலைகள் இல்லாத போதும், கொத்து கொத்தாகப் பூக்கும் திறன் கொண்டவை..
நேர்மறை எண்ணங்களை தருவிப்பதுடன்,
குறைபாடுகளற்ற, தூய்மையான, மகிழ்ச்சி நிறைந்த நிலையை ப்ளூமேரியா தருவிக்கின்றன..
இன்று..
#May_12..
#சர்வதேச செவிலியர் தினம்..
அன்பும், அர்ப்பணிப்பும், அமைதியும் நிறைந்த செவியிலிர்களுக்கு, இவர்களது நாளில் ஆற்றல் மிக்க ப்ளூமேரியா பூக்களைப் பரிசளிப்போம்..
நறுமணம் மிகுந்த நாளாகட்டும்..
#இயற்கை_365.