Literary Works

#இயற்கை_365 #111

#இயற்கை_365 #111

உரிக்கும் போது, அழ வைத்து,
உண்ணும் போது, அதிக பலன்களைத் தருகின்ற வெங்காயத்தின் தாவரப் பெயர் Allium cepa.
தோன்றிய இடம்: ஆசியா..

"தல்லி சாங்க்கன பிட்டன்னு உள்ளி சாங்க்குனட்ட.."
"தாய் வளர்க்காத குழந்தையையும் வெங்காயம் வளர்க்குமாம்.."
என்ற பழமொழிக்கேற்ப, இயற்கை ஈந்த அன்னையான
#வெங்காயம்..
#இன்று..
அன்னையர் தின சிறப்புப் பதிவாக..!

தினந்தோறும் நமது உணவில் கட்டாயம் இடம்பெறும் காய்களில் வெங்காயம், பல நூறு வருடங்களாக நமது வாழ்வோடும் பிணைந்து விட்ட ஒன்றாகும்..

வெள்ளை, மஞ்சள், ஊதா, பச்சை நிறங்களில் காணப்படும்
சின்ன வெங்காயம் மற்றும் பெல்லாரி வெங்காயத்தின் குணங்களும், பலன்களும் ஒன்றே..

Onion என அழைக்கப்படும் வெங்காயம், Unio என்ற இலத்தீன் மொழியிலிருந்து தோன்றியது. அதன் இதழ்கள் ஒன்றாக இணைந்து இருப்பதால், இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது..

குறைந்த கலோரிகள் (40/100g), நிறைந்த நீர்த்தன்மை மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள் A, C, E, B மற்றும் குரோமியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், செலீனியம் போன்ற கனிமங்கள் அனைத்தும் நிறைந்தவை வெங்காயம்..

Allicin, Quercetin, Cryptoxanthin, Beta Carotene, Rutin, Flavanols, Anthocyanins, Polyphenols, போன்ற அத்தியாவசிய தாவரச்சத்துகளும் இவற்றில் அடங்கியுள்ளன..

பாட்டி வைத்தியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வெங்காயத்தில், விஞ்ஞானப் பூர்வமாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன..

உரிக்க உரிக்க ஒன்றுமில்லை என்று இதனைக் கூறினாலும், மிக அதிகமான பலன்களைத் தருகின்ற காய் வெங்காயமே..

நோயெதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன் அதிகரிப்பு, இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு, சிறுநீர்ப் பெருக்கம், தசை மற்றும் எலும்புகளுக்கு வலிமை, புற்றுநோய் எதிர்ப்பு ஆகிய குணங்கள் நிறைந்தவை வெங்காயம்..

இருதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன், கல்லீரல் நோய்கள், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் நோய் ஆகியவற்றில் வெங்காயம் பயனளிக்கும்..

வயிற்றுப் புண், குடல் அழற்சி, மலச்சிக்கல் ஆகியவற்றில் பெரிதும் பயனளிக்கும் வெங்காயம், சிறுநீரக நோய்கள், கண் நோய், மூட்டு வலி, எலும்புப்புரை, வயோதிக நோய்களிலிருந்தும் காக்கிறது..

உடல் வெப்பத்தைக் குறைத்து, தாகம் தணிப்பதால் காய்ச்சல் மற்றும் அம்மை நோய்களுக்கு வெங்காயம் உதவுகிறது..

சருமத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், இளநரை, பொடுகு, முடியுதிர்தலையும் வெங்காயம் தடுக்கிறது..

தேனீ, குளவி ஆகியவற்றின் விஷத்தன்மையைப் போக்கும் ஆற்றல் மிக்கது வெங்காயம்..

Allyl Propyl Disulphide என்ற தாவர எண்ணெய் தான் வெங்காயத்தின் காரத்தன்மைக்கும் நெடிக்கும் காரணமாகும்..

உரிக்கும்போது கண்களில் நீர் வருவதற்கு காரணம், Allinase என்ற நொதி சுரந்து, Syn propanethial S oxide வெளியேறுவதால் தான்..

ஆதிகாலத்தில் அன்றாட உணவாகத் திகழ்ந்த வெங்காயம், முதலில் காட்டுப்பயிராகவே இருந்துள்ளது..

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்..

உரிக்க, உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதால், இதனை பெரிதும் மதிக்கின்றனர் எகிப்தியர்கள்..

எகிப்தில் வெங்காயம் வழிபாட்டிற்குரிய பொருளாக வெங்காயம் இருந்துள்ளது..

பாரோக்கள் (Pharaohs) என்று அழைக்கப்படும் எகிப்திய மன்னர்களைப் புதைக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்துப் புதைத்துள்ள எகிப்தியர்கள், அழியாத ஒரு வாழ்வின் வடிவமாகவே இதனை கருதியுள்ளனர்..

பிரமிடுகளின் உட்சுவர்களிலும், மன்னர்களைப் புதைத்த சமாதிகளிலும், வெங்காயத்தை ஓவியமாக வரைந்துள்ளனர் எகிப்தியர்கள்..

எகிப்திய மதகுருக்கள், வழிபாட்டுப் பீடங்களில் தங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் பொருட்களுள் வெங்காயம் முக்கியம் வகித்துள்ளது..

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும் முன்பு வெங்காயத்தை உட்கொண்டதாக குறிப்புகள் கூறுகின்றன..

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்..

தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர்..

அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கின்றனர்.. அல்குர்ஆனில் (2:261) வெங்காயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது..

யூதர்கள் முற்காலத்திலேயே வெங்காயத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்கிறது புதிய ஏற்பாடு..

சொர்க்கத்திலிருந்து சாத்தான் தூக்கியெறிப்பட்ட போது, சாத்தானின் இடதுகாலுக்குக் கீழே பூண்டு முளைத்ததாகவும், வலது காலுக்குக் கீழே வெங்காயம் முளைத்ததாகவும் துருக்கி கதைகள் கூறுகின்றன..

துர்சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, ஐரோப்பியர்கள் வெங்காயத்தை வீடுகளில் தோரணமாகவும், கழுத்தில் மாலையாகவும் சூடி வந்தனராம்..

மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்..

சுஷ்ருத, சாரக சம்ஹிதைகளில் வெங்காயத்தின் பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன..

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது..

ஐரோப்பாவில் பீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம் ஆகிய மூன்றும் மிக முக்கிய விருந்து உணவாக கருதப்படுகிறது..

மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சிறந்த நோய் தீர்க்கும் உணவாக, வெங்காயத்தைப் பயன்படுத்துகின்றனர்..

வெவ்வேறு
தட்பவெப்பநிலைகளிலும், வெவ்வேறு மண்வளத்திலும், சுலபமாகப் பயிரிடப்படும் வெங்காயத்தை எளிதாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் முடியும் என்பது இதன் சிறப்பு..

உலர வைத்து, உணவுப் பஞ்சத்தின் போது பயன்படுத்தக்கூடிய அரிய உணவாகவும் வெங்காயம் திகழ்கிறது..

உலக நாடுகளெங்கும் அதிகம் பயிரிடப்படும் தாவரங்களுள் ஒன்று வெங்காயம்..
ஏறத்தாழ 170 நாடுகள் வெங்காயத்தைப் பயிரிடுகின்றன..

உலகளவில், வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள், சீனா, இந்தியா, எகிப்து ஆகியன..

"Know your Onions என்ற சிலேடை, எந்த ஒரு தகவலையும், பாடத்தையும் முழுமையாக கற்றுக் கொள்ளவதைக் குறிப்பதாகும்..

பெயரில் மட்டுமே " சின்ன வெங்காயம் "
பலன்களில் மிகப் பெரிய வெங்காயமாகத் திகழும் இந்த அருமருந்தை உண்டு ஆரோக்கியம் அடைவோம்..!!

#இயற்கை_365