குழந்தைகளின் வளர்ச்சியின் மைல்கற்கள்..!
நான் வளர்கிறேனே மம்மீ..
பிறக்கும் போது, மொத்த செல்களின் எண்ணிக்கை 26 பில்லியன். பிற்காலத்தில் அவை 50 ட்ரில்லியனாக மாறுகின்றது.
பிறக்கும் போது, குழந்தையின் தலை : உடல் அளவின் விகிதம் 4:1.
வளர்ந்த பின், இது 8:1 என மாறுகின்றது.
குழந்தையின் மூளை மிகவும் வேகமாக வளரும். முதல் வருடத்திற்குள் 60% வளர்ச்சியை அடைந்து விடுகிறது.
பிறந்த குழந்தை, 16-17 மணிநேரம் தூங்கும். ஒரு வருடத்தில், 12-15 மணிநேரம் தூங்கும்.
குழந்தைகளின், தூக்க சுழற்சி 1.5-2.5 மணிநேரம். இதில், 50% REM என்ற ஆழ்நிலை தூக்கமாகும்.
6 மாதங்கள் வரை, குழந்தை மாதத்திற்கு 1.5 - 2.5 cm என வளரும். பிறகு ஒரு வருடம் வரை, மாதத்திற்கு 1 cm என வளரும்.
முதல் பிறந்தநாளில், 25cm உயரம் அதிகமாகும்.
இரண்டாவது பிறந்தநாளில் 12.5cm உயரம் அதிகமாகும்.
3 மாதங்களில் சத்தமாக சிரிக்கும், 6 மாதங்களில் அம்மா என ஒலியசைக்கும். ஒரு வருடத்தில், 2-3 வார்த்தைகள் பேசும்.
குழந்தை எழுந்து உட்கார்வது 8 மாதத்தில், நிற்பது 1 வயதில், நடப்பது 15 மாதங்களில்..
பிறந்த குழந்தை, தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் என்றாலும் 10,000 சுவையுணரிகள் நாக்கில் இருக்கும்.
குழந்தை பிறக்கும் போது, இருதயத் துடிப்பு 120/min என்பது, 80/min ஆக மாறுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும்.
பிறந்த குழந்தைகளுக்கு, கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். 24-26 வார கருவிலேயே, கேட்கும் திறன் ஆரம்பித்துவிடுகிறது.
பிறக்கும் குழந்தை, நிறங்களை வேறுபடுத்திப் பார்க்காது. 3 மாதங்களில் ஆரம்பித்து, 18 மாதங்களில் நிறங்களை உணரும்.
6 மாத கருவிலேயே, குழந்தை மணங்களை உணருமாம். பிறந்தவுடன் வாசம் மற்றும் ஒலித்திறன் வளர்ச்சி பெறுகின்றது.
பால்பற்கள் மொத்தம் 20. ஆறு மாதத்தில், முதலில் தோன்றுவது கீழ் பல். 2 வயதில் ஏறத்தாழ அனைத்து பற்களும் முளைத்துவிடும்.
ஆயிரத்தில் ஒரு குழந்தை, பிறக்கும் போதே பல்லோடு பிறக்கின்றது.
3 மாதங்கள் தொடங்கி, ஒரு வருடத்திற்குள், குழந்தைகளுக்கு 120L உமிழ் நீர் சுரக்குமாம்.
"வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே..!"
ஆம்..
தெய்வம் தந்த பூக்கள் தான் நம் குழந்தைகள்..
*****************