Literary Works

#இயற்கை_365 #115

#இயற்கை_365 #115

பச்சை நிறமும், மிளகின் மணமும், காரமும், கசப்பும் சேர்ந்த சுவையும் நிறைந்த Arugula இலைகளின் தாவரப் பெயர் Eruca sativa.
தோன்றிய இடம்: மொராக்கோ..

உணவகத்தில் சிக்கன் ஃப்ரை மீது அலங்கரிக்கப்பட்டிருந்த அருகுளா இலைகளை, அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்த துருக்கியர் ஒருவர் கூறிய தகவல்கள், இன்றைய இயற்கைப் பதிவாக..
#The_Rocket_Leaf என்ற அருகுளா..

Garden Rocket, Salad Rocket, Rucola, Gargeer என அழைக்கப்படும் அருகுளா சிரியா, லெபனான், துருக்கி மற்றும் அரபி நாடுகளில் பெரிதும் விரும்பப்படும் கீரைகளில் ஒன்றாகும்..

Rocquette என்ற ஃப்ரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்ட இலத்தீன் Erucaவிற்கு தோட்டத்தில் பயிரிடப்படும் செடி என்ற பொருளாகும்..

The French Paradox என்றே அழைக்கப்படுகிறது அருகுளா..
மது, மாமிசம், கேளிக்கைகள் என உல்லாசமாக வாழும் ஃப்ரெஞ்சு மக்களை, இருதய நோய், இரத்த அழுத்தம், உடற்பருமன் ஆகியவற்றிலிருந்து காப்பது, இந்த Rocquette என்றே அவர்கள் நம்புகின்றனர்..

அமெரிக்கர்களின் மிகப் பிடித்தமான சாலட் இலையான அருகுளா, பெரிதும் பச்சையாகவே உட்கொள்ளப்படுகிறது..

அடர்பச்சை நிறத்தில், நீர்த்தன்மை நிறைந்த இலைகள் மட்டுமன்றி, அருகுளாவின் பூக்கள், காய் நெற்றுகள் மற்றும் விதைகள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன..

பச்சையம் நிறைந்த அருகுளா இலைகளில், குறைந்த கலோரிகள் (25/100g), அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் A, E, C, K, B மற்றும் அத்தியாவசிய கனிமங்களும் நிறைந்துள்ளன..

Flavanols, Polyphenols,
Indoles, Sulforaphane, Thiocyanates, Isothiocyanates ஆகிய தாவரச்சத்துகள், இவற்றிற்கு மருத்துவ குணங்களுக்கு காரணமாக விளங்குகின்றன..

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போலவே, இலைவகைத் தாவரமான
அருகுளா, அவற்றைக் காட்டிலும் 30-50% அதிகளவு ஊட்டச்சத்துகள் நிறைந்தது..

உலகின் மிகச்சிறந்த ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது அருகுளா இலைகள்..

90% நீர்த்தன்மை கொண்ட அருகுளா நீர்வறட்சியைப் போக்கி, புத்துணர்ச்சி தருகிறது..

குறைந்த கலோரிகள், நிறைந்த நார்ச்சத்து கொண்டதால் உடற்பருமன், மலச்சிக்கல் மற்றும் மூல நோய்க்கு பெரிதும் அருகுளா உதவுகிறது..

நோயெதிர்ப்பு, புத்துணர்ச்சி, இரத்த சுத்திகரிப்பு, எடை குறைப்பு, ஞாபகத்திறன் அதிகரிப்பு, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை என அருகுளாவின் பயன்கள் மிக அதிகமே..

அருகுளா இலைகளின் Sulforaphane மற்றும் பச்சையம் (chlorophyll) புற்றுநோய்க்கு எதிராகவும் உதவுகிறது..
தோல் புற்றுநோய், உணவுக்குழாய், கணயம் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் தாக்கத்தை Sulforaphane தடுக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

அருகுளா இலைகள்
நீரிழிவு நோய்க்கு மருந்தாவதுடன்,
இதிலுள்ள Alpha Lipoic Acid நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், சிறுநீரக பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்தும் காக்கிறது..

அருகுளாவில் செறிந்துள்ள nitrates, தமனிகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், இருதய, நுரையீரல், மூளை மற்றும் கண்களின் இரத்தக் குழாய்களில் அடைப்பைத் தடுக்கின்றது..

தசைகளுக்கும், எலும்புகளுக்கும் வலிமை கூட்டுவதுடன், பாலுணர்வை தூண்டும் தன்மையும் கொண்டது இதன் இள இலைகளும், நெற்றுகளும்..

"The Rocket excites the sexual desire of drowsy people" என்ற ரோமானிய கவிஞரின் வரிகள் இதனை உறுதிபடுத்துகின்றன..

மேலும் வயோதிக நோய்களான
அல்சைமர், பார்க்கின்சன், மூளைத்தேய்வு மற்றும் ஞாபகத்திறன் இழப்புகளில் அருகுளா பெரிதும் பயனளிக்கிறது..

பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள அருகுளாவை, பாலுணர்வைத் தூண்டும் உணவாகவே பண்டைய ரோம் மற்றும் எகிப்தில் பயன்படுத்தியுள்ளனர்..

மிஷ்னா என யூதர்களால் அழைக்கப்படும் அருகுளா, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரமும் ஆகும்..

அதிர்ஷ்டத்தைத் தருகின்ற உணவாக அருகுளா இத்தாலியில் பயன்படுகிறது..

அரபு நாடுகள், சிரியா, லெபனான், பிரேசில், அர்ஜென்டினா, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் அருகுளா இலைகள் பச்சையாக உணவில் சேர்க்கப்படுகிறது..

களைச்செடியாக கருதப்பட்ட இந்த இலைகளை, 1980ல் அமெரிக்கா பயன்படுத்த தொடங்கியவுடன் அருகுளா உலகெங்கும் பிரசித்தி பெற்றது..

The United States of Arugula என்ற புத்தகம், அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது..

விதைத்து நான்கு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் அருகுளா, வறண்ட நிலச்சதுப்புகளில் வளரும் தன்மை கொண்டது..

அமெரிக்கர்களின் மிகப் பிடித்தமான சாலட் இலையான அருகுளா, பெரிதும் பச்சையாகவே உட்கொள்ளப்படுகிறது..

ஃப்ரெஞ்சு மற்றும் இத்தாலியர்களின் pasta, pesto, saladகளில் கட்டாயம் இடம்பெறும் அருகுளா, பச்சையாகவும், சமைக்கப்பட்டும் உட்கொள்ளப்படுகிறது..
Rucolino என்ற மதுபானத்தில், மிளகு மணம் கொண்ட அருகுளா இலைகள், செரிமானமின்மைக்காக சேர்க்கப்படுகின்றன..

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்காசிய நாடுகளில் அருகுளா விதைகளிலிருந்து பெறப்படும் தராமிரா எண்ணெய், அழகு சாதனமாகவும், ஊறுகாய் பதனிடவும் பயன்படுகிறது..

"Greens Glorious Greens" என கொண்டாடப்படும் அருகுளா, வாழ்க்கைக்கு மணமூட்டும் இயற்கை வரமே..!!

#இயற்கை_365