Literary Works

#இயற்கை_365 #117

#இயற்கை_365 #117

"பிரியாணி வாசம் பட்டையைக் கிளப்புது.." என்பதற்கு முக்கிய காரணமாக விளங்கும் பட்டை என்ற Cinnamonன் தாவரப் பெயர் Cinnamonum verum.
தோன்றிய இடம்: இலங்கை..

மனதைக் கவரும் மணமும், அனைவரும் விரும்பும் லேசான கார்ப்பு மற்றும் இனிப்பு சேர்ந்ததொரு சுவையும் கொண்ட இலவங்கப்பட்டை உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருளாகும்..

இன்று #June_10..
உலக மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் தினம்..
பட்டையைக் கிளப்பும் இலவங்கப்பட்டை பற்றிய சிறு பதிவு இன்று..

Cinnamon என்ற இலவங்கப்பட்டை, Kinnamomon எனும் கிரேக்க சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ஏலக்காய் போன்ற மணத்தை தரும் தாவரம் என்ற பொருளாகும்..

தாதுநட்டம் என அழைக்கப்படும் இலவங்கப்பட்டை தாருச்சினி, வராங்கா, உட்கடா என்ற பெயர்களாலும் ஆயுர்வேதத்தில் வழங்கப்படுகிறது.
தார்சினி என்பது இதன் அரபுப் பெயராகும்..

இலவங்கப்பட்டை இருவகைப்படுகிறது..
நல்ல சுவையும், நறுமணமும், குறைந்த காரமும் மிக்க சிலோன் பட்டை அனைவரும் விரும்பும் ஒன்றாகும்..
அதிக காரம், அதிக மணம் கொண்ட கேஸியா பட்டை மற்றொரு வகையாகும்..

அதிசயிக்கத்தக்க ருசியை, உணவில் கூட்டும் இலவங்கப்பட்டை அளப்பரிய ஆரோக்கியத்தையும் தருகிறது..

வேறு எந்தவொரு தாவரத்திலும் இல்லாத அளவு, ஆண்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்தவை இலவங்கப்பட்டை..

மிதமான கலோரிகள் (59/100g) நார்ச்சத்து மற்றும் நீர்த்தன்மை கொண்ட இலவங்கப்பட்டையில், வைட்டமின்கள் C, B, A மற்றும் கால்சியம், பொட்டாசியம், போரான், குரோமியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகிய கனிமங்களும் உள்ளன..

Omega 3 & 6 கொழுப்பு அமிலங்கள், Alpha Pinene, Alpha Terpene, Camphene, Limonene, Coumarins, Linalool, Camphor போன்ற 80திற்கும் மேலான தாவரச்சத்துகள் நிறைந்தது பட்டை..

இலவங்கப்பட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், 50% வரை மருத்துவ குணங்கள் கொண்ட Cinnamaldehyde உள்ளது..

மேலும்,
Benzaldehyde, Eugenol, Geraniol, Iso Eugenol, Furfural, Camphor ஆகிய தாவர எண்ணெய்கள் இலவங்கப்பட்டையின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகின்றன..

வாந்தி, வயிற்று அழற்சி, வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று உபாதைகளிலிருந்து பாதுகாக்கிறது இலவங்கப்பட்டை..

நோயெதிர்ப்பு சக்தி, ஞாபகத்திறன் அதிகரிப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, சரும பாதுகாப்பு, பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை இலவங்கம்..

உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், உடற்பருமன், நாட்பட்ட நுரையீரல் நோய், மூட்டு வீக்கம், எலும்புப்புரை ஆகியவற்றின் நோய்த் தாக்கத்தை குறைக்க உதவுகிறது இலவங்கம்..

இன்சுலின் சுரப்பதை அதிகரித்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவதுடன், நீரிழிவினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி, சிறுநீரக மற்றும் இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது இலவங்கப்பட்டை என இங்கிலாந்தின் NIH ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

அல்சைமர், பார்க்கின்சன், Multiple sclerosis போன்ற நரம்பு சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், தூக்கமின்மை, பதட்ட நிலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது இலவங்கப்பட்டை..

கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதுடன், மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது இலவங்கப்பட்டை..

பசியின்மையைப் போக்கி, செரிமானத்தைக் கூட்டுவதால் இலவங்கப்பட்டை குழந்தைகளுக்கு தேனுடன் கலந்து தரப்படுகிறது.. குழந்தைக்கால அலர்ஜி, ஆஸ்துமா, இருமலைக் குறைக்கவும் உதவுகிறது இந்த உற்சாக மூலிகை..

சிறந்த கிருமிநாசினியாகத் திகழும் இலவங்கப்பட்டை எண்ணெய், கரப்பான் மற்றும் பூச்சிகளை விரட்டவும் பயன்படுகிறது..

"தாதுநட்டம் பேதி சருவவிஷயம் 
ஆகிய நோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ் - சாதிவிடம்
ஆட்டுமினாப் போடிருமல் ஆகியநோய்க் 
கூட்டமறஓட்டுமில வங்கத் துரி.."
என்று அகத்தியர் தனது பாடலில் இலவங்கப்பட்டை பற்றி குறிப்பிட்டுள்ளார்..
விந்துக் குறைபாடுகள், வயிற்றுப்போக்கு, விஷக்கடிகள், இருமல், வயிற்றுக்கடுப்பு ஆகியன ஒழிந்து போகும் என்பது இப்பாடலின் பொருளாகும்..

Disclaimer: 50 கிலோ எடையுள்ள ஒருவர், ஐந்து கிராம் இலவங்கப்பட்டையை மட்டுமே உட்கொள்ளலாம்..
அதிகளவில் இதனை உட்கொள்ளும் போது, வாய்ப்புண், வயிற்று அழற்சி முதல் வலிப்பு நோய் வரை ஏற்படக் கூடும்..

இதிலுள்ள Coumarins இரத்த உறைவை தடுக்கச் செய்கிறது.. Anticoagulants மற்றும் Anti platelets போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போதும், கர்ப்ப காலத்திலும் இலவங்கப்பட்டையைத் தவிர்ப்பது நல்லது..

Luxury Spice என அழைக்கப்பட்ட இலவங்கப்பட்டை எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானியர்களிடையே
தகுதியை குறிக்கவே பயன்படுத்தப்பட்டது..

விலைமதிப்பு மிக்க இலவங்கப்பட்டை அரசர்கள் பயன்படுத்தவும், கடவுளுக்கு படைக்கவும் மட்டுமே ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது..

Myrrh என்ற இறைவனுக்கு பூசப்படும் வாசனை திரவியங்களில் இலவங்கப்பட்டையும் ஒன்றாகத் திகழ்ந்தது..

இலவங்கப்பட்டையின் குணங்களையும், அதன் வரவேற்பையும் நன்குணர்ந்த அரபியர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதனை மேற்கத்திய நாடுகளில் வியாபாரப்படுத்தியுள்ளனர்.. அதனை கொள்முதல் செய்யும் இடங்களை இரகசியமாகவே வைத்திருந்தனர்..

இப்போதும் அதிக விலைக்கு விற்கப்படும் இலவங்கப்பட்டை, முதலாம் நூற்றாண்டில், ஒரு பவுண்ட் இலவங்கம் ஐந்து கிலோ வெள்ளிக்கு சமமாக இருந்துள்ளது..

இலவங்கப்பட்டையை கொண்டு சேர்க்க
"மனிதன் மற்றும் அவனது விடாமுயற்சி" தேவை என குறிப்பிட்டுள்ளார் ரோமானிய கவிஞர் ப்ளைனி..

இதனைத் தவிர்க்க அமேசான் காடுகளிலும், புதிய அமெரிக்காவிலும் இலவங்கப்பட்டையைத் தேடி பல பயணங்களை மேற்கொண்டனர் கொலம்பஸ், பிஸாரோ போன்ற மாலுமிகள்..

முதன்முதலாக இலங்கையில் இலவங்கப்பட்டை இருப்பதை, பதினாறாம் நூற்றாண்டில் கண்டறிந்த போர்ச்சுகீசியர்கள் உடனடியாக அவர்கள் மீது போர் தொடுத்தனர்..
அதன் பிறகு தான், இலவங்கப்பட்டை தனது ஐரோப்பிய பயணத்தை எளிதாக மேற்கொண்டது..

நமது பிரியாணி மற்றும் குருமாவில் மணம் சேர்க்கும் இலவங்கப்பட்டை,
மேற்கத்திய உணவுகளில் பெரும்பங்கு வகிக்கிறது..

"Christmas and Cinnamon..
Apple pie and Doughnuts.."
என்று இலவங்கப்பட்டையைக் கொண்டாடுகின்றனர் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும்..

ஜாம், ஜெல்லி, கேக், காஃபி, தேநீர், குக்கீஸ், புட்டிங் என அனைத்து உணவுகளிலும் இலவங்கம் சேர்க்கப்படுகிறது..

இதன் தனிமணத்தின் காரணமாக மதுபானங்கள், பழரசங்களை சுவை கூட்டுவதுடன், டூத் பேஸ்ட், சோப், ஷாம்பூ, க்ரீம் மற்றும் வாசனைத் திரவியங்களிலும் இலவங்கப்பட்டை எண்ணெய் சேர்க்கப்படுகிறது..
இலவங்கப்பட்டை, Cassia என்ற சிறுமரத்தின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது..

இலவங்க மரத்தின் மரப்பட்டையின் வெளிப்பகுதி பயன்படுத்தப்படுவதில்லை..
Quills என்ற சுருண்டு நிற்கும் உட்பகுதியே உணவாகப் பயன்படுகின்றது..

உலகளவில் இலவங்கப்பட்டையை அதிகம் விளைவிக்கிறது இலங்கை.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இந்தோனீசியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது..

அதிகளவு இலவங்கப்பட்டைக் கொள்முதல் செய்வது மெக்கிச்கோ..

ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டைப் பொடியை ஒரு நிமிடத்தில் நீரின்றி அப்படியே விழுங்கும் விபரீத விளையாட்டு, Cinnamon challenge என இணையத்தில் 2014ல் வைரலானது..

Cinnamomea என்ற புதிய ஆங்கிலச் சொல் இலவங்கப்பட்டையின் அடர் பழுப்பு நிறத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இலவங்கப் பட்டையின் மருத்துவ குணங்களையும், மற்ற பலன்களையும் பார்க்கும்போது இதனை ஒரு அதிசய மூலிகை என்று ஏற்க வேண்டும்..!!
ஆரோக்கியம் தரும் இலவங்கப்பட்டையுடன் இந்த நாளை மணமிக்கதாக்கிடுவோம்..

#இயற்கை_365