Literary Works

#இயற்கை_365 #118

#இயற்கை_365 #118

பெண்கள் கருவுற்றதும் பரிந்துரைக்கப்படும் பேரீச்சை என்ற Datesன் தாவரப் பெயர் Phoenix dactylifera.
தோன்றிய இடம்: பெர்சியா மற்றும் அரேபியா.

"இரத்தம் கம்மியா இருக்கும் போல, முகமெல்லாம் வெளுத்திருக்கு பாரு..
பேரீச்சம் பழம் சாப்பிடு.."
எனப்படும் இந்த பிசுபிசுப்பான இனிப்பு பழத்துடன் இன்றைய பதிவு
#A_date_with_Dates

சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தவுடன் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க உட்கொள்ளும் பழம், ஒரு மாத கால ரமலான் நோன்பிற்குப் பின், Eid ul Fitr என்ற ஈகைத் திருநாளன்று பெரிதும் பயன்படுத்தப்படும் பழம், பாரம்பரியமான பழம், தூய்மையான பழம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது பேரீச்சை..

சிவப்பு நிற விரல்கள் என்று கிரேக்க மொழியில் பொருள்படும் Khajoor Dates பேரீச்சை என்று தமிழில் வழங்கப்படுகிறது.

பேரீச்சை (பெருமை+ஈச்சை) என்ற ஈச்சை
சங்க காலத்தில் ஈந்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..
இனிப்பும், துவர்ப்பும் கலந்ததொரு சுவை கொண்டது பேரீச்சை..

கால்களை நீரிலும், தலையை நெருப்பிலும் வைத்திருக்கும் பேரீச்சை மரங்கள், வெப்பநிலையில், பாலைவனங்களில் நன்கு வளரும் மரவகைத் தாவரமாகும்..

இம்மரங்களில் கொத்து கொத்தாக, பூத்துக் காய்த்து, கனியாவது தான் பேரீச்சை..

இளங்காய்கள் பச்சை நிறமும், முதிர்ந்தவை சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும், நன்கு பழுத்தவை கருமை அல்லது கரும்பழுப்பு நிறத்திலும் என பேரீச்சை பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன..

Medjool, Barhi, Dayri, Hayani என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேரீச்சை வகைகள் உள்ளன..

நூற்றிற்கும் மேலான சத்துக்களையும், கனிமங்களையும் கொண்ட பேரீச்சை, சூரியசக்தி அனைத்தும் தன்னுள்ளே கொண்ட பழம் என்றே வழங்கப்படுகிறது..

அதிக கலோரிகள் (282/100g), அதிக நார்ச்சத்து, அதிகளவில் மாவுச்சத்து (75g/100g), வைட்டமின்கள் A, C, E, B, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், செலீனியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்தவை பேரீச்சை..

Powerhouse of Nutrients எனப்படும் பேரீச்சையில் Leucine, Isoleucine, Threonine, Phenyl alanine, Lysine போன்ற அமினோ அமிலங்களும், Palmitic, Stearic, Linoleic, Oleic, Capric போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன..

Proanthocyanidins, Phenolic compounds, Beta carotene, Crypto xanthine, Lutein Zeaxanthine, Pectin, Isoflavones என பல்வேறு antioxidants, பேரீச்சையின் மருத்துவ குணங்களுக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகின்றன..

உடனடி ஆற்றல், இரத்த சுத்திகரிப்பு, இரத்த விருத்தி, நோயெதிர்ப்பு ஆற்றல், புற்றுநோய் எதிர்ப்பு, ஞாபகத்திறன் அதிகரிப்பு போன்ற பல்வேறு குணங்கள் நிறைந்தவை பேரீச்சை..

பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டால் எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும், வலிமை கூடும் என்பது அனைவரும் அறிந்தது தான்..

பேரீச்சையில், க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் அதிகமுள்ளதால் இவை
உடல் வலிமையையும், சக்தியையும் பெருமளவில் அதிகரிக்கின்றன..

மேலும் பேரீச்சையின் கால்சியம், செலீனியம், பொட்டாசியம்
எலும்பு மற்றும் தசைகளின் வலிமையைக் கூட்டுகின்றன. மூட்டு நோய் மற்றும் தசைவீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன..

பசியின்மையைப் போக்கி குடலியக்கத்தை சீர் செய்வதால் வயிற்று அழற்சி, செரிமானமின்மை, பெருங்குடல் நோய், புற்றுநோய், மலச்சிக்கல், மூலநோய் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது பேரீச்சை..

இருதய நோய், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், பக்கவாதம், அல்சைமர் மற்றும் பார்க்கின்சன், மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களின் தாக்கத்தை மட்டுப்படுத்துகிறது பேரீச்சை..

இதிலுள்ள இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ, தாய் சேய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.. பெண்கள் கருவுற்றதும் பேரீச்சை பரிந்துரைக்கப்படும் காரணமும் இதுவே..

நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும் என நம்பப்படுகிறது..

ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதுடன், பாலுணர்வைத் தூண்டவும் பயன்படுகிறது பேரீச்சை. நெடுங்காலமாக அரபு நாட்டின் காதல் சின்னமாக பேரீச்சை விளங்குகிறது..

மாலைக்கண் நோய்க்கு மருந்தாகும் பேரீச்சை, Macular Degeneration, கண்புரை போன்ற வயோதிகம் சார்ந்த கண்நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது..

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து
சருமத்தைப் பாதுகாப்பதுடன், சுருக்கங்கள், தழும்புகள் மறையவும் உதவுகிறது பேரீச்சை..

மது மற்றும் மற்ற போதைகளிலிருந்து விடுபடவும் பெரிதும் உதவும் பேரீச்சை ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது..

Disclaimer: பிசுபிசுப்பான தன்மையின் காரணமாக, பேரீச்சை பழத்தில் மண் மற்றும் இதர அழுக்குகள் எளிதில் படிந்துவிடுகின்றன..
நன்கு சுத்தம் செய்த பழங்களை உட்கொள்ள வேண்டும்..

அதிக கலோரிகள் உள்ள காரணத்தால் உடற்பருமன் ஏற்படும் வாய்ப்புகள் பேரீச்சையில் அதிகம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.
ஒரு சிலருக்கு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு. செரிமானமின்மை ஆகியனவும் ஏற்படக்கூடும்..

மண்ணிலிருந்து
மனிதனை உருவாக்கியபிறகு, கடவுள் தன்னிடம் மிகுதியான மண்ணை, பேரீச்சை மர வடிவம் தந்து, அவற்றை சொர்க்க பூமியில் பதித்ததாக (Garden of Paradise) அரபிக் கதைகள் கூறுகின்றன..

மனிதன் முதன்முதலாக பயிரிட்ட மரங்களுள் ஒன்றான பேரீச்சை, பாபிலோனிய, மெசபடோமிய கலாச்சாரங்களில், (4000 BC) உணவாகவும், மதுபானமாகவும் திகழ்ந்துள்ளது..
அதன் ஓலைகள் கூரைகள் மற்றும் பாய்களாகவும், மரங்கள் வீடுகளை கட்டமைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன..

வெற்றியைக் குறிக்க பேரீச்சை ஓலைகள் பயன்படுகின்றன..
Palm Sunday என பேரீச்சையுடன் யூதர்கள் கொண்டாடுவதுடன், ஏழு புனித பழங்களில் ஒன்றாகவும் பேரீச்சையை வணங்குகின்றனர்..

"தூய நிலையை அடைய, பேரீச்சை உண்டு நோன்பைத் துற..
இல்லையென்றால் தண்ணீர் குடித்து நோன்பைத் துற.."

"பேரீச்சை இல்லாத இல்லங்களில் பசியும் குறையாது..
உணவும் கிட்டாது.."
இவை நபிகள் நாயகத்தின் மொழிகளாகும்..

இதன் பாரம்பரிய வரலாற்றின் காரணமாக, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில், 
பேரீச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் 1978ஆம் ஆண்டு 23 லட்சமாக இருந்த பேரீச்சை மரங்களின் எண்ணிக்கை 2003ஆம் ஆண்டு 4.07 கோடியாக அதிகரித்துள்ளது..
 
ஈராக்கில் மட்டுமே 22 மில்லியன் பேரீச்சை மரங்களும், அவற்றிலிருந்து வருடம்தோறும் ஆறு மில்லியன் டன் உயர் ரக பழங்களும் கிடைக்கப் பெறுகின்றன..

அமெரிக்காவில் காணப்படும் மென்மையான, மிக இனிப்பான California dates, Medjool வகையைச் சார்ந்தவை..

உலகளவில் எகிப்து, ஈரான், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேரீச்சை பழத்தை பெருமளவு உற்பத்தி செய்து, உலகெங்கும் ஏற்றுமதி செய்கின்றன..
இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும்,
தமிழகத்திலும் பேரீச்சை வளர்கின்றது. ஆனால், உற்பத்தி மிகவும் குறைவு.

தரம் குறைந்த பேரீச்சை, விலங்குகளின் உணவாகப் பயன்படுகின்றன. மரத்தின் அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன..

Dates syrup, Sweetener, Ajwa என்ற தேன், வைன் போன்ற மதுபானங்கள், உலர் பேரீச்சை, மாத்திரைகள் என்ற பல ரூபங்களை எடுத்துள்ளது பேரீச்சை..

வறுத்து பொடிசெய்த பேரீச்சையின் விதைகள் காஃபிக்கு இணையாக அருந்தப்படுகிறது..

கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக், கேண்டி, ஆகியவற்றில் பெருமளவு பயன்படுத்தப்படும் இந்த "Fruit of the Desert"
"Fruit of the Desserts" ஆகவும் விளங்குகிறது..

எண்ணிலடங்கா நன்மைகள் கொண்ட பேரீச்சையை, எண்ணி தினமும் மூன்று பழங்களை உட்கொள்வோம்..
பலன் பெறுவோம்..

#இயற்கை_365