சொரியாசிஸ்
சொரியாசிஸ் தொற்று நோயா..??
பரம்பரை நோயா..??
Psoriasis என்ற தோல் நோய்..
ஒரு கண்ணோட்டம்..
சொரியாசிஸ் என்பது தோலில் ஏற்படும் தொற்றும் தன்மையற்ற 'தன்னுடல் தாக்குநோய்' (autoimmune disease) ஆகும்.
சொரியாசிஸ் நோயில், தோல் பொடிந்து அல்லது வளர்ந்து சிவப்பு மற்றும் வெள்ளை திட்டுகளாக தோன்றும். (patches & plaques).
சொரியாசிஸ் மரபணு (64%) மற்றும் சுற்றுச்சூழல் இவற்றின் காரணமாக ஏற்படுகின்றது என்கிறது ஆய்வு.
சொரியாசிஸ், உடலின் எந்தப்பாகத்திலும் தோன்றலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
தோல் அரிப்பு, எரிச்சல், சிவப்பு நிற திட்டுக்கள், தோலில் ரத்தக் கசிவு, சோர்வு ஆகியன சொரியாசிஸின் அறிகுறிகள்.
தோலில் காயம், மன அழுத்தம், நோய்த் தொற்று, steroidகள், மருந்துகள், அதீத சூரிய ஒளி ஆகியன சொரியாசிஸை தீவிரப்படுத்தும்.
குடிபழக்கம், புகைபிடித்தல் ஆகியன சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்துவதை கடினமாக்கும்.
சொரியாசிஸ் விரல் நகங்களைத் தாக்குவதால் நகங்களில் குழிகள், வண்ணமாற்றம் மற்றும் தடிப்பு ஏற்படும்.
ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலி மற்றும் வீக்கம் ஏற்படும். (Psoriatic arthropathy).
ஒரு முறை சொரியாசிஸ் வந்தால் தணிதல், அதிகரித்தல் (relapse & remission) என மாற்றங்கள் ஏற்படும்.
Psoriasis உறுதிப்படுத்துவதற்கு, தோல் பையாப்ஸி (biopsy) அல்லது ஸ்கிரேப்பிங் (scrapping) ஆகியன தேவைப்படலாம்.
சொரியாசிஸின் வரலாறு..
கிரேக்கர்கள் செதிலுள்ள தோல் நிலைகளுக்கு லெப்ரா (lepra) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
பல நூற்றாண்டுகளாக, சொரியாசிஸ், ஒருவகையான தொழுநோய் என்றே கருதப்பட்டதாம்.
1841 ஆம் ஆண்டில் வியன்னாவின், தோல் மருத்துவரான Ferdinand von Hebra சொரியாசிஸ் என்ற பெயரை முதன்முதலில் வழங்கினார்.
சொரியாசிஸ் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வருகிறது. Psora என்றால், நமைச்சல் என்று பொருள்.
சொரியாசிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை.
நோயின் தன்மையை மாற்றியமைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
Topical cream/மேற்பூச்சுகள்- moisturisers, கரி எண்ணை டைத்ரானால் (coaltar dithranol), கால்சிபோட்ரியால் (calcipotriol), ஸ்டீராய்ட்கள் ஆகியன.
PUVA என்ற அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
தீவிர சொரியாசிஸில், தோல்நிபுணர்கள் Methotrexate, Cyclosporin, Sulfasalazine போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர்.
Photo dynamic therapy, என்ற சிகிச்சை முறையில் 5- ALA சொரியாசிஸ் திட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மாற்று சிகிச்சைகளான Icthyotherapy, Dead sea உப்பு, ஆயுர்வேத சிகிச்சை ஆகியன சொரியாசிஸில் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் சில தகவல்கள்..
மரபணு PSORS1, சொரியாசிஸ் வம்சாவழியாக வருவதற்கு 35-50% காரணி என கண்டறியப்பட்டுள்ளது.
சொரியாசிஸில் மரபணு மற்றும் நோய்சார்ந்த சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள்..
சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது ஒருவரிமிருந்து மற்றவர்களுக்குப் பரவாது.!
****************