#WorldHemophiliaDay
இன்று உலக ஹீமோஃபீலியா தினம்..
அடிபட்ட காயங்களில், இரத்தம் உறையாமல், தொடர்ந்து கசியும் நிலை "ஹீமோஃபீலியா" ஆகும்..
"சிறு மூக்கு உடைஞ்சிருச்சு..
இரத்தம் நிக்கவே இல்ல.
கொஞ்சம்
பாருங்க.." என குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, ஓடிவரும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..
#ஹீமோஃபீலியா!!
உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போது உறைதலுமே, இரத்தத்தின் இயல்பு..
அடிப்பட்ட காயங்களிலிருந்து, வெளியாகும் இரத்தம், 5 முதல் 10 நிமிடங்களுக்குள் உறைந்திட வேண்டும்..
அவ்வாறு உறையாமல் இருக்கும் நிலையே, ஹீமோஃபீலியா என்ற இரத்தம் உறையாமை என அழைக்கப்படுகிறது..
ஹீமோஃபீலியா என்பது மரபணு சார்ந்த நோயாகும். இந்நோய் ஹீமோஃபீலியா A, B என இருவகைப்படுகிறது..
தாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். ஆணின் உடலில் XY மற்றும் பெண்ணின் உடலில், XX குரோமோசோம்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்..
X குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, ஹீமோஃபீலியா ஏற்பட முதன்மை காரணமாகிறது..
உலகளவில், பத்தாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஹீமோஃபீலியா A, முப்பதாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஹீமோஃபீலியா B காணப்படுகிறது..
X குரோமோசோம் மூலமாக ஏற்படும் மரபணு நோய் என்பதால், ஆண்களில் மட்டுமே ஹீமோஃபீலியா காணப்படுகிறது..
பெண்கள், ஹீமோஃபீலியா மரபணுக்களை சுமப்பவர்கள் (Carriers) மட்டுமே..
விக்டோரியா மகாராணி, ஹீமோஃபீலியா மரபணுக்களை கொண்டதால், இங்கிலாந்தின் அரசப் பரம்பரையில், (Royal Disease) ஹீமோஃபீலியா காணப்பட்டது..
ஹீமோஃபீலியா நோயில், அடிபட்ட இடத்தைப் பொறுத்து, அறிகுறிகள் மாறுபடுகின்றன..
திடீரெனத் தானாகவே ஏற்படும் மூக்கு மற்றும் பற்களின் ஈறுகளில் இரத்தகசிவு, இந்நோயின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்றாகும்..
மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் இரத்தக்கசிவு, அந்த இடங்களில், வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அடிபட்ட இடங்களில் ஒத்தடம் தரக்கூடாது..
வெகுசிலருக்கு மூளை, உணவுக்குழாய் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் இரத்தக்கசிவினால் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடும்..
ஹீமோஃபீலியா நோய்க்கு முழுமையான சிகிச்சை கிடையாது என்றாலும், அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும் போது, Cryoprecipitate, FFP ஆகிய இரத்த உறைவு பொருட்கள் ஏற்றப்படுகிறது..
Gene therapy என்ற மரபணு சிகிச்சை, ஹீமோஃபீலியா நோயில் ஆரம்ப நிலையில் தான் உள்ளது..
இரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனத்தின் தலைவர் Frank Schnabelன் பிறந்தநாளான #April17, உலக ஹீமோஃபீலியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது..
தொடர் இரத்தக்கசிவு ஏற்பட்டால் மருத்துவ உதவி பெற வேண்டிய அவசியம் பற்றி நோயுற்ற குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக ஹீமோஃபீலியா அமைப்பு 28 ஆண்டுகளாக செயல்படுகிறது..
"அறிவைப் பகிர்ந்தால், வலிமை கிட்டும்.." என்று உலக ஹீமோபீலியா சம்மேளனம் இந்நாளில் அழைப்பு விடுக்கிறது..
Yes..
Sharing Knowledge gives us Strength..!!