#இயற்கை_365 #101
#இயற்கை_365 #101
முக்கனிகளில், மிகப்பெரிய கனி..
மிகுந்த சுவை கொண்ட கனி..
பழம்பெரும் கனி..
என்ற சிறப்புடைய, Jack என்ற பலாவின் தாவரப் பெயர் Artocarpus heterophyllus.
தோன்றிய இடம்: இந்தியா..
முட்கள் நிறைந்த இந்த மிகப் பெரிய பழத்தின் உள்ளே, சுவை மிகுந்த, மணம் மிகுந்த, நிறம் மிகுந்த சின்னஞ்சிறு சுளைகள் என அனைவரையும் ஈர்க்கும் பழம், பலா..
சக்கப் பழம் என்ற மலையாள மொழியிலிருந்து, போர்ச்சுகீசிய மொழியில், Jaca என அழைக்கப்பட, அதுவே மருவி Jack Fruit ஆனது..
கோடைக் காலத்தில் அதிகம் காணப்படும், பலா, கூழப்பலா, கறிப்பலா, தேன்பலா, ஆசினிப்பலா என வகைப்படுத்தப்படுகிறது. சிறிய நார் உள்ள கூழாசக்கா, விற்பனைக்கு ஏற்றது..
மரத்தின் அடிப்பகுதி அல்லது கிளைகளில் கனியும் பலாப்பழங்கள், ஏறத்தாழ 5-10 கிலோ வரை எடை கொண்டவை..
பலாவின் கனி, காய், விதை என அனைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன..
அதிகளவில் கலோரிகள், (95/100g), (fructose), புரதச்சத்து, அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை கொண்ட பலாவில், வைட்டமின்கள் A, C, B மற்றும் தாவரச்சத்துக்களும் உள்ளன..
மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற கனிமங்கள் நிறைந்தவை பலா..
பலாவில் அதிகளவில் காணப்படும் Cryptoxanthine, Xanthine, Lutein, Lignans, Saponins Carotenoids ஆகிய தாவரச்சத்துகள் இவற்றின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக விளங்குகின்றன..
பலாச்சுளைகள் உடனடி ஆற்றலைத் தரும்..
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..
ஞாபகத்திறனையும் கூட்டும்.. தூக்கமின்மையைப் போக்கும்..
சரும அழகினைக் கூட்டும்..
இருதய நோய், இரத்த அழுத்தம், வயிற்று அழற்சி, உடற்பருமன், இரத்த சோகை, மலச்சிக்கல், ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் நோய்களுக்கு பலா பெரிதும் பயனளிக்கிறது..
வயோதிக நோய்களான கண் நோய், தோல் அழற்சி மற்றும் சுருக்கங்கள், எலும்புப்புரை, மூட்டு வீக்கம் ஆகியவற்றை தடுக்கவும் பலா உதவுகிறது..
அதிமுக்கியமாக, பெருங்குடல் புற்றுநோய், கர்ப்பப்பை, சினைப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் கொண்டதாக பலாவில் கண்டறியப்பட்டுள்ளது..
இதிலுள்ள Lignans, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் பயனைத் தருவதால், மாதவிடாய் பிரச்சினைகள், PMS, மெனோபாஸ் ஆகியவற்றில் பலா பயனளிக்கின்றது.. மேலும் தைராய்டு சுரப்பதை சீராக்கவும் பலா பெரிதும் உதவுகிறது..
பழுக்காத பலாக்காய்களில் மிகக் குறைந்த கலோரிகளும், அதிகளவில் நார்ச்சத்தும் காணப்படுவதால் நீரிழிவு நோய்க்கு பெரிதும் உதவும் என சிட்னியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன..
பலாக்காய்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வல்லவை.. மேலும் பித்தம், வாந்தி. மயக்கம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் குணமாக்கும் ஆற்றல் கொண்டவை இவை..
புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த பலாக்கொட்டைகளும் உணவாகப் பயன்படுகின்றன..
Disclaimer: அதிகளவில் பலாவை உட்கொள்ளும் போது, வாந்தி, வயிற்று அழற்சி ஆகியவை ஏற்படக்கூடும்..
பழுத்த பலாவின் கலோரிகள் நீரிழிவு நோய்க்கு ஏற்புடையதல்ல..
பல்லாயிரம் நூற்றாண்டுகளாக நமது பண்பாட்டுடன் இயைந்த பலா, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, குற்றாலக் குறவஞ்சி ஆகிய இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..
பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு தமிழ்ப் பெயர்களும் உள்ளன..
அப்படியே அல்லது தேனில் ஊற வைத்து உட்கொள்ளப்படும் பலாவை, கூழ், கீர், ஜாம், ஜெல்லி ஆகியன தயாரித்தும் உட்கொள்ளலாம்.
பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள், சிப்ஸ் ஆகியவை தயார் செய்தும் உட்கொள்ளலாம்..
பழுக்காத பலாக்காயை இறைச்சிக்கு ஈடாகவும் பயன்படுத்தப்படுகின்றனர்..
மேற்கிந்திய மலைத்தொடரில் அதிகம் காணப்படுகின்ற பலா, இலங்கை, இந்தோனீசியா, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது..
இதனை வெளித்தோற்றத்தில் கரடுமுரடாகவும், உள்ளே அமைதியாகவும் இருக்கும் மனிதர்களோடு ஒப்பிடவும் செய்வர்..
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா' என்ற பாரதிதாசன் வரிகளின் உண்மையை உணர்வோம்..
ஆரோக்கியம் தரும் பலாவினை ஏற்போம்..
#இயற்கை_365..